• Sun. Jan 18th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் கதிர் நடிக்கும் ‘ஆசை ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Byadmin

Jan 18, 2026


‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் கதிர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஆசை’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷிவ் மோகா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆசை ‘திரைப்படத்தில் கதிர் – நடிகை திவ்யா பாரதி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பாபு குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் என்ற திரைப்படத்திற்கு ரேவா இசையமைத்திருக்கிறார்.

காதலைப் பற்றிய பற்றி வித்தியாசமாக பேசப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஆர். ஆதித்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காதலர்களின் அர்த்தமுள்ள பார்வைகளும், உணர்வுகளும் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதால் காதலைப் பற்றிய அழுத்தமான படைப்பாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் அஜித்குமார் நடிப்பில் 1995 ஆம் ஆண்டில் ‘ஆசை’ எனும் பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது என்பதும் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரில் கதிர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்பதும் நடிகர் கதிர் நடிப்பில் கடந்த 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் எந்த தமிழ் படங்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post நடிகர் கதிர் நடிக்கும் ‘ஆசை ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin