கன்னட நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வினோத் வி. தோன்ட்லே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கவுடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே, டிராகன் மஞ்சு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ண சந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியேஷன் – சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்த்தன் ஹரி – ஜெய்ஷ்ணவி – சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் , ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கும் இடையேயான சாதி சார்ந்த சமூக அழுத்தங்கள் உணர்வு பூர்வ போராட்ட காட்சிகளாக இடம் பிடித்திருப்பதால்.. ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
The post நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.