• Wed. Apr 8th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் அப்டேட்ஸ்

Byadmin

Apr 8, 2026


தமிழ் திரையுலகில் வணிக சந்தை மதிப்பு கொண்ட நடிகரான ஜெய் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘சட்டென்று மாறுது வானிலை’  திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்றாவது  பாடலும் ,பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் உருவாகி வரும்’ சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தில் ஜெய் , மீனாட்சி கோவிந்தராஜன்,  யோகி பாபு , கருடா ராம், ஸ்ரீ மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.

ரொமான்டிக் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி வி ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபு விஜய் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் ஆதரவை பெற்றிருந்த நிலையில்… இப்படத்தில் இடம்பெற்ற ‘பல வேடிக்கை மனிதரைப் போல..’ என தொடங்கும் மகாகவி பாரதியாரின் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை மகாகவி பாரதியார் மற்றும் பாடலாசிரியர் மதுரை சோல்ஜர் ஆகியோர் இணைந்து எழுத, பின்னணி பாடகர் மதுரை சோல்ஜர் மற்றும் இசையமைப்பாளரும் பாடகருமான க்ரிஷ் ஜி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

பாரதியாரின் பாடல் வரிகள் மற்றும் இளைய தலைமுறையினரின் ஆங்கிலம் கலந்த றாப் பாடல்கள் ஆகியவற்றின் கலவையாக உருவாகி இருக்கும் இந்த பாடல் இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

The post நடிகர் ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் அப்டேட்ஸ் appeared first on Vanakkam London.

By admin