6
தமிழ் சினிமாவில் தனக்கென வணிக சந்தையை கொண்டுள்ள பிரபல நடிகரான நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டி என் 2026 – TN 2026’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் உமாபதி எஸ். ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டி என் 2026 – TN 2026’ திரைப்படத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம். எஸ் .பாஸ்கர் , இளவரசு, ஷிரிதா ராவ் , சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் , ரெடின் கிங்ஸ்லி , தலைவாசல் விஜய், சித்ரா லட்சுமணன், ஜாவா சுந்தரேசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.
அரசியல் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு பொலிடிகல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறார்.
எதிர்வரும் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் .. தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களம் காணும் திரை நட்சத்திரமான விஜயின் அரசியல் குறித்து பகடி செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் … படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பையும் ,ஆர்வத்தையும் உண்டாக்கி இருக்கிறது.
இதன் காரணமாக இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.