தெலுங்கின் பிரபல நடிகரும், பான் இந்திய நடிகருமான நிகில் சித்தார்த்தா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சுயம்பு ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சுயம்பு ‘ எனும் திரைப்படத்தில் நிகில் சித்தார்த்தா , சம்யுக்தா மேனன், நபா நடாஷ், சுனில் , சுப்பராஜு, சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
இதிகாசமும் , புராணமும் கலந்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிக்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தர் தாகூர் மது வழங்குகிறார்.
எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் புராணங்களில் அடிப்படையில் பிரம்மாண்டமாக வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், அதிரடியான பின்னணி இசையாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
The post நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘சுயம்பு ‘ படத்தின் டீசர் வெளியீடு appeared first on Vanakkam London.