7
நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் படங்கள் வழங்கி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி ‘திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அடாவடி’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, கிருத்தி ஷெட்டி ,யோகி பாபு ,சீமான் , கௌரி ஜி கிஷன், ஷா ரா, மாளவிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை 7செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் வழங்குகிறார்.
பல தடைகளை கடந்து எதிர்வரும் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என உறுதி பட அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செய் யா ஃபார் அடாவடி ‘எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் ரோகேஷ் -ஹைசன்பர்க்- விக்னேஷ் சிவன் – ஆகியோர் இணைந்து எழுத, பின்னணி பாடகர் மதிச்சயம் பாலா பாடியிருக்கிறார். துரித தாள லயத்தில் றாப் இசையுடன் வெளியாகி இருக்கும் இந்த பாடல் இளைய தலைமுறை இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.