• Fri. Dec 19th, 2025

24×7 Live News

Apdin News

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப் ‘ படத்தின் அப்டேட்

Byadmin

Dec 19, 2025


பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சஹானா சஹானா’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், பொமன் இரானி,  மாளவிகா மோகன், நிதி அகர்வால், ரீத்தி குமார் , ஜரினா வஹாப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் கொமடி திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி ஜி விஷ்ணு ப்ரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் , தெலுங்கு,  மலையாளம், கன்னடம்,  இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சஹானா சஹானா..’ என தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான எஸ் தமன், பின்னணி பாடகர் தீரஜ் , பின்னணி பாடகி சுருதி ரஞ்சனி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

The post நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப் ‘ படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.

By admin