இயக்குநரும், நடிகருமான மணிகண்டன் செல்வராஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பொலிஸ் ஸ்டோரி’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொலிஸ் ஸ்டோரி’ திரைப்படத்தில் மணிகண்டன் செல்வராஜ், ஏ .வெங்கடேஷ், ‘அருவி’ மதன், வேல்முருகன், தணிகை, ஜனனி, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிரி மர்பி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹரிஹரன் இசையமைத்திருக்கிறார். காவலர்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஃபயர் ஃபாக்ஸ் ஃபிலிம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரணிகா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒரு கிராமத்தின் திருவிழா – கிராமம் – அங்கு இயங்கும் காவல் நிலையம் – அதில் பணியாற்றும் காவலர்கள் – ஆகியோர்களை தொடர்பு படுத்தி விவரிக்கப்பட்டிருப்பதால் இப்படம் காவலர்களின் தொழிற்சார்ந்த வாழ்வியலை விவரிக்கும் படைப்பு என தெரிய வருகிறது.
The post நடிகர் மணிகண்டன் செல்வராஜ் நடிக்கும் ‘பொலிஸ் ஸ்டோரி ‘ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு appeared first on Vanakkam London.