• Sat. Jan 24th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியீடு.

Byadmin

Jan 24, 2026


தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக – அரசியல்வாதியாக – நடித்திருக்கும் ‘கராத்தே பாபு ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘டாடா’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கராத்தே பாபு’. இதில் ரவி மோகன், சக்தி வாசுதேவன், கே. எஸ். ரவிக்குமார், நாசர், காளி வெங்கட், விடிவி கணேஷ், சுப்பிரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் அண்டனி, சிந்து பிரியா உள்ளிட்ட ஏராளமான அறிமுகமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

வடசென்னை அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் வாழ்வியலை மையப்படுத்தி பொலிடிகல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கடந்த காலங்களில் வட சென்னை பகுதியைச் சார்ந்த பிரபலமான அரசியல் வாதி ஒருவரின் வாழ்வியல் சம்பவங்களை தழுவி தயாராகி இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால்… ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதிலும் தமிழக சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் களம் சூடான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் தருணத்தில் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

By admin