0
‘அஷ்டவர்க்கம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ரஜினி கிஷன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ ரஜினி கேங்’ எனும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரைமுலகின் நட்சத்திர நடிகரான ரவி மோகன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரஜினி கேங்’ எனும் திரைப்படத்தில் ரஜினி கிஷன், திவிவிகா, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், கல்கி ராஜா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
என். எஸ். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்திருக்கிறார். ஹாரர் கொமடியாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மிஸ்ரி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. எஸ். பதம் சந்த் – சி அரியந்த் ராஜ் – ரஜினி கிஷன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழ் சினிமாவின் தாலி சென்டிமென்ட்டை மையப்படுத்தி ஹாரர் கொமடி காட்சிகள் மற்றும் பேய் குத்து பாடல் இடம் பிடித்திருப்பது.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.