• Tue. Mar 31st, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ | அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

Byadmin

Mar 30, 2026


இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், தமிழ் திரை உலகின் பிரபல நடிகருமான லெஜன்ட் சரவணன் கதையின் நாயகனாக – அதிரடி எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர் ‘ திரைப்படத்தில் லெஜன்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ் புத்,  லால் , பிரபாகரன், அமிர்தா ஐயர்,  விடிவி கணேஷ் ,இயல், ஐஸ்வர்யா, ஜார்ஜ் மரியன், அறந்தாங்கி நிஷா ,ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்டமான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகில் இருந்து ஏராளமான முன்னணி பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்க பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் உரையாடலும் , எக்சன் காட்சிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இருப்பதால் இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

The post நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ | அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin