• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

நடிகர் விஜய்யின் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்து கார் விபத்து!

Byadmin

Aug 20, 2025


நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By admin