0
தமிழ் சினிமாவில் நட்சத்திர கலைஞராக உயர்ந்து வரும் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு ‘பரீட்- Buried’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பரீட் – Buried’ எனும் திரைப்படத்தில் வெற்றி, சாந்தினி தமிழரசன், அக்ஷதா ஸ்ரீனிவாஸ், பாலாஜி சக்திவேல், ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு, கல்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
கே. வி. கிரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் டைட்டில் லுக்கில் ‘உண்மை இங்கே மறைந்துள்ளது’ என்ற வாசகமும், அதனை எதிரொலிக்கும் வகையில் வெட்டப்பட்ட குழி ஒன்று இடம் பிடித்திருப்பதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.