• Fri. Dec 19th, 2025

24×7 Live News

Apdin News

நடிகர் ஷான் நடிக்கும் ‘ரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Byadmin

Dec 18, 2025


சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ரேஜ்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரேஜ் ‘ எனும் திரைப்படத்தில் ஷான்,  ஷெர்லி பபித்ரா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

எம். எஸ். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆர்.விபின் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அனாமிகா ரவீந்திரநாத் மற்றும் அபிஷேக் ரவீந்திரநாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அர்த்தமுள்ள பார்வையுடன் நாயகன் தோன்றுவதும், வழக்கத்திற்கு மாறான காதல் கதை என்ற வாசகமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

By admin