1
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் ‘சரஸ்வதி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
நடிகையும், அறிமுக இயக்குநருமான வரலட்சுமி சரத்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘சரஸ்வதி ‘எனும் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார் , பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எட்வின் சஹாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை தோசா டைரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சரஸ்வதி’ படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார் என்பதால்… இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு திரையுலகத்திலும், ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.