• Sat. Sep 13th, 2025

24×7 Live News

Apdin News

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட ‘கும்கி 2’ பட ஃபர்ஸ்ட் லுக்

Byadmin

Sep 13, 2025


இயக்குநரும், நடிகருமான பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2 ‘ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2 ‘ திரைப்படத்தில் மதி, ஷிரிதா ராவ்,  வி ஜே ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் நடிகர் அர்ஜுன் தாஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

அடர்ந்த வனத்தில் வாழும் வனவிலங்கான யானையை மையப்படுத்தி பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென் மூவிஸ் மற்றும் பென் மருதர் சினி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்திலால் காடா மற்றும் தவால் காடா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இதனிடையே பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் விக்ரம் பிரபு- லட்சுமி மேனன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த ‘கும்கி’ படத்தின் முதல் பாகம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது என்பதும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிட தக்கது.

By admin