• Wed. Dec 31st, 2025

24×7 Live News

Apdin News

நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன்

Byadmin

Dec 31, 2025


முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மது, போதைப் பொருட்களால் பள்ளி – கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் சாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இவற்றை பள்ளி – கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் தடுக்க வேண்டும். கல்லூரிகளில் நட்பு, சமூக உணர்வு வளர வேண்டும். மது, போதையை ஒழிக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது, போதைப்பொருள் ஒழிப்பு, சாதி சங்கங்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியிலிருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். அப்போது திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன். திருச்சியில் எனது நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதுரையில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

By admin