போலந்துக்குள் ரஷ்யாவின் அத்துமீறும் நடவடிக்கையால், நட்பு நாடுகளின் உதவியுடன் போர் விமானங்களுடன் போலந்து தயார் நிலையில் உள்ளது.
அத்துடன், முன்னெச்சரிக்கை காரணமாக உக்ரேனுக்கு அருகில் இருக்கும் கிழக்கு வட்டார விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
உக்ரேனை அண்மித்த வட்டாரங்களில் விமான தாக்குதல்கள் இடம்பெறும் அபாயம் இருப்பதால் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி போலந்தைப் பாதுகாக்க விரையும் நாடுகள்
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா-உக்ரேன் போர் தொடர்கிறது. உக்ரேனுக்கு அப்பால் ரஷ்யா போரை விரிவுபடுத்துமோ என்ற கவலை எழுந்துள்ளது.
போலந்தின் விமான தற்காப்புப் படையும் உளவு அமைப்புகளும் எச்சரிக்கை நிலையில் இருப்பதாக அந்நாட்டின் இராணுவம் X தளத்தில் பதிவிட்டது.
போலந்தின் தற்காப்பு நடவடிக்கைகள் அதன் வான்வெளியையும் மக்களையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றன என்று வலியுறுத்தப்பட்டது.
The post நட்பு நாடுகளின் உதவியுடன் போர் விமானங்களுடன் தயார் நிலையில் போலந்து! appeared first on Vanakkam London.