• Thu. Oct 9th, 2025

24×7 Live News

Apdin News

நண்பனை எப்படி கொல்வது என்று ChatGPT கேட்ட பள்ளி மாணவன் சீர்திருத்த நிலையத்தில்!

Byadmin

Oct 9, 2025


அமெரிக்கா – புளோரிடா மாநிலத்தில் பாடசாலையில் படிக்கும் மாணவன் ஒருவன் தனது நண்பனை கொலை செய்வது தொடர்பில், ChatGPTயிடம் ஆலோசனை கேட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

13 வயதுடைய மாணவன் வகுப்பறையில் இருக்கும் போது, “என் நண்பனை எப்படிக் கொல்வது” என்று OpenAI-யின் ChatGPT செயலிக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.

Gaggle எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் உடனடியாக அது தொடர்பில் முறைப்பாடு செய்து. பின்னர், மாணவன் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

விளையாட்டாக அவ்வாறு செய்ததாக குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அமெரிக்க பாடசாலைகளின் வன்முறை வரலாற்றைக் கருத்தில் கொண்டு, மாணவரின் அறிக்கையை அதிகாரிகள் உண்மையான ஆபத்தாகக் கருதுகின்றனர்.

இந்நிலையில், சிறுவனை சிறுவர் சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By admin