0
ஜேர்மன் நத்தார் சந்தையில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த 09 வயது சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை மாக்டேபர்க்கில் உள்ள சந்தையில் திரண்டிருந்த கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஆண்ட்ரே க்ளீஸ்னர் என்ற சிறுவனர் இறந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், 45, 52, 67 மற்றும் 75 வயதுடைய 04 பெண்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
கொலை, கொலை முயற்சி மற்றும் ஆபத்தான உடல் காயம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார் அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.