1
பிரான்ஸில் கடந்த 12 மாதங்களில் 4ஆவது பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது.
அரசின் கடன்களை எதிர்கொள்ள அவர் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், தனக்கான ஆதரவை நிரூப்பிக்க பேரூ நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொண்டார்.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது.
முன்னதாக கடந்தாண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரான்ஸ் பிரதமர் பார்னியர் தோல்வி அடைந்ததால், அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.