• Tue. Jan 20th, 2026

24×7 Live News

Apdin News

நம் உடலின் புரதத் தேவையை ஈடு செய்ய இறைச்சிக்குப் பதிலாக சேர்க்க வேண்டிய 5 தாவர உணவுகள் எவை?

Byadmin

Jan 20, 2026


உணவு, புரதச்சத்து, மாமிச உணவு, இறைச்சி, தாவர உணவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சோஃபி மாக்ஃபி
    • பதவி, பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர்

ஒரு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் தாவர அடிப்படையிலான உணவு வகைகளை உருவாக்குபவர் என்ற முறையில், அதிக புரதம் கொண்ட தாவர அடிப்படையிலான சமையலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். இது குறித்து ‘சோஃப்ஸ் பிளான்ட் கிச்சன்’ (Soph’s Plant Kitchen) என்ற புத்தகத்தையும் நான் எழுதியுள்ளேன்.

நீங்கள் அதை வலிமைப் பயிற்சியுடன் (வலிமையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்) இணைக்கும்போது, புரதம் நமது உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் மற்றும் சரிசெய்யவும் உதவுகிறது.

இது மிகவும் நிறைவான ஊட்டச்சத்தும் கூட, இது நமக்குத் திருப்தி உணர்வைத் தருகிறது. ஆனால் புரதத்தைப் பற்றி குறிப்பாக அது தாவரங்களிலிருந்து வரும்போது பல கட்டுக்கதைகள் உள்ளன.

புரதத்திற்காக உங்களுக்கு உண்மையில் இறைச்சி தேவையா?

தாவரப் புரதங்கள் விலங்குப் புரதங்களைப் போலச் சிறந்தவை அல்ல என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. அங்கு கிடைக்கும் தகவல்கள் குழப்பமானதாகவும் முரண்பட்டதாகவும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை நீங்கள் நம்புவதில் வியப்பில்லை.

உண்மை என்னவென்றால், அனைத்து தாவர உணவுகளிலும் அத்தியாவசியமானவை எனக் கருதப்படும் ஒன்பது அமினோ அமிலங்கள் உட்பட 20 அமினோ அமிலங்களும் (புரதத்தின் அடிப்படை அலகுகள்) உள்ளன. இவற்றை நமது உடலால் உருவாக்க முடியாது, எனவே நாம் உணவின் மூலம் அவற்றைப் பெற வேண்டும்.

By admin