• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் – தனுஷ் தரப்பு கூறும் காரணம் என்ன?

Byadmin

Nov 16, 2024


நயன்தாரா குறித்த நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் வரும் 18ஆம் தேதேதி வெளியாகிறது

பட மூலாதாரம், NAYANTHARA/Instagram

படக்குறிப்பு, நயன்தாரா குறித்த நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் வரும் 18ஆம் தேதேதி வெளியாகிறது

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள தன்னைப் பற்றிய ஆவணப் படத்தின் டிரெய்லரில், ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட 3 விநாடி வீடியோவை பயன்படுத்தியதற்காக, அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரியதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

தனுஷ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் நயன்தாரா இன்று (நவம்பர் 16) வெளியிட்ட அறிக்கை, திரையுலகில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் தனுஷ் தரப்பில் நேரடியாக எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், நயன்தாரா தரப்புக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் தனுஷ் தரப்பின் வாதங்களைக் குறிப்பிட்டுள்ளார், அவருடைய வழக்கறிஞர் அருண்.

அவர், “நானும் ரௌடிதான் படத்திற்கான பதிப்புரிமை உரிமையாளர் வண்டர்பார் தயாரிப்பு நிறுவனம்தான் என்பதை நயன்தாரா தரப்பு மறுக்கவில்லை என்பதே, படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளுக்கும் தனுஷே உரிமையாளர் என்பதை நிறுவப் போதுமானது” என்று அவர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

By admin