0
தென்னிந்திய திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹாய்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையிசை உலகில் பாடலாசிரியராக பணியாற்றி பிரபலமான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு ,ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைக்கிறார்.
காதலுடன் கூடிய ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- ரவுடி பிக்சர்ஸ்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ – ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உமேஷ் குமார் பன்சால் – நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ்.எஸ். லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாராவும், கவினும் காதலர்கள் போல் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.