• Tue. Mar 4th, 2025

24×7 Live News

Apdin News

நயோமி வாடனபே: சமூக ஊடகங்களில் ஒரு கோடி பேர் பின்தொடரும் ஜப்பானிய பியோன்சே – யார் இவர்?

Byadmin

Mar 3, 2025


காணொளிக் குறிப்பு, நயோமி வாடனபே: ஜப்பானிய பியோன்சே பற்றித் தெரியுமா?

சமூக ஊடகங்களில் ஒரு கோடி பேர் பின்தொடரும் ‘ஜப்பானிய பியோன்சே’ பற்றி தெரியுமா?

“சிலர் என்னிடம், ‘நீங்கள் மிகவும் குண்டாக இருக்கிறீர்கள். ஸ்கர்ட் அணியாதீர்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நான் கண்டுகொள்வதில்லை” என்கிறார் நயோமி வாடனபே, ஜப்பானின் நகைச்சுவை நட்சத்திரம் மற்றும் ஃபேஷன் ஐகான்.

2008இல், தனது வைரலான பியோன்சே தோற்றத்தால் இவர் புகழ் பெற்றார். இதனால் அவருக்கு ‘ஜப்பானிய பியோன்சே’ என்ற பெயர் கிடைத்தது. சமூக ஊடகங்களில் இவரை 1 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

3 வருடங்களுக்கு முன், அவர் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தார், அங்கு சர்வதேச கவனம் பெற அவர் விரும்புகிறார். கடந்த மாதம், தனது முதல் ஆங்கில ஸ்டாண்ட்-அப் ஷோவை நடத்தினார்.

நயோமி இளம்பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் என்றும், உடல் வடிவம் குறித்த நேர்மறை எண்ணங்களை அவர் ஊக்குவிக்கிறார் என்றும் அவரது ரசிகர்கள் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin