இளைய தலைமுறை ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் ‘டூட்’ படத்தில் இடம்பெறும் ‘நல்லாயிரு போ’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டூட்’ எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமீதா பைஜூ, சரத்குமார், ஹிர்து ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா , டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இடம் பெற்ற’ நீ கேட்டால் கூட..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணி பாடகர்கள் திப்பு , சாய் அபயங்கர் மற்றும் மோகித் சவுகான் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
உரையாடலுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான சூழல் காதலில் தோல்வியுற்ற காதலர்- தோற்கடித்த காதலியை.. ‘வாழ்வாங்கு வாழட்டும்’ என வாழ்த்தும் தொனியில் இருந்தாலும்… சென்னை மக்களின் சுடுமொழியான ‘…த்தா போன்னு விட்டுட்டேனே’ என்ற சொல்லாடலையும் இடம்பெறச் செய்து… திரைப்படப் பாடலுக்கான அறத்தை மீறி இருப்பதால்… பாடல் வரிகளுக்காகவே பாடலை ரசிக்கும் கூட்டத்தினரின் எதிர்ப்பினை இந்தப் பாடல் சம்பாதித்து இருக்கிறது. இருப்பினும் சாய் அபயங்கரின் மெல்லிசை மெட்டு மனதை ஈர்க்கிறது.
The post ‘நல்லாயிரு போ’ Vs ‘ ..த்தா போன்னு விட்டுட்டேனே’ appeared first on Vanakkam London.