ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் இன்று காலை ஒரு குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post நளீம் எம்.பி. மீது தாக்குதல்! appeared first on Vanakkam London.