குடும்ப வன்முறை வழக்கில் தனது மனைவியின் நடத்தை குறித்து தெரிந்துகொள்ள அவரது செல்போன் அழைப்பு விவரங்களை பாதுகாக்க கோரி கணவன் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தன் மனைவி நள்ளிரவில் சிலருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாகவும் எனவே, அவரது அழைப்பு விவரங்களை உடனடியாகப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும், இல்லையெனில் அதை அழித்து விடுவார் என தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வாதத்தை நிராகரித்த கூடுதல் அமர்வு நீதிபதி சுனாலி குப்தா, மற்றொரு நபரின் அழைப்பு விவரங்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவைக் கோருவதற்கு மனுதாரர் தெளிவான, குறிப்பிட்ட மற்றும் நியாயமான காரணங்களை முன்வைக்க வேண்டும்
ஒரு பெண் எந்தவொரு நபருடனும் முறையற்ற அல்லது ஒழுக்கக்கேடான உறவில் இருக்கிறார் என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லாத பட்சத்தில், அவர் நள்ளிரவில் ஒரு ஆணுடன் பேசினார் என்ற காரணத்திற்காக அவரது குணநலன்களைக் கேள்விக்குட்படுத்த முடியாது.
ஒரு பெண் ஆணிடம் பேசக்கூடாது என்ற மனப்பான்மை இன்றைய இந்திய சமூகத்தில் இல்லை.
மனைவியின் அழைப்பு விவரங்களைப் பாதுகாத்து வைப்பதற்கு கணவர் எந்தவொரு வலுவான காரணங்களையும் அளிக்கவில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.