0
புதுமுக நடிகர் ஆதித்ய மாதவன் கதையின் நாயகனாக – கம்பீரமான காவல்துறை அதிகாரியாக – நடித்திருக்கும் ‘அதர்ஸ்’ எனும் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அதர்ஸ்’ எனும் திரைப்படத்தில் ஆதித்ய மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ், ஜெகன், ஹரிஷ் பெராடி, வினோத் சாகர், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் கவனத்தை கவர்ந்த நிலையில்… தற்போது இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.