• Sat. Oct 11th, 2025

24×7 Live News

Apdin News

நவம்பரில் வெளியாகும் மோகன் லாலின் ‘விருஷபா ‘

Byadmin

Oct 11, 2025


தென்னிந்திய சுப்பர் ஸ்டாரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விருஷபா’ எனும் பான் இந்திய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நந்த கிஷோர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘விருஷபா’ எனும் திரைப்படத்தில் மோகன்லால், சமர்ஜித் லங்கேஷ், ராகினி திரிவேதி, நயன் சரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாம் சி எஸ் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை கனெக்ட் மீடியா – பாலாஜி டெலிஃபிலிம்ஸ் – வியாஸ் ஸ்டுடியோஸ் – ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ‘:ஒரு தந்தைக்கும் , மகனுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான பந்தத்தை பின்னணியாக கொண்டு இந்த அதிரடி எக்சன் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

உறவுகள்- தியாகம் -விதி -ஆகிய காரணிகளை முன்னிலைப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களை பிரமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

By admin