• Mon. Mar 23rd, 2026

24×7 Live News

Apdin News

நவீன் சந்திரா நடிக்கும் ‘நீளிரா’ படத்தின் அப்டேட்

Byadmin

Mar 23, 2026


தமிழ்- தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான நடிகர் நவீன் சந்திர கதையின் நாயகனாக நடித்திருக்கும்’ நீளிரா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்யாணபய்லா’ எனும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சோமீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது ,ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், கபிலா வேணு, ‘கயல்’வின்சென்ட், நவயுகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

செல்வரட்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். போர் ஏற்படுத்தும் மரண பயத்தின் பின்னணியில் திருமணம் ஒன்றின்  நிகழ்வை சர்வைவல் திரில்லராக விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அக்கா காரி அலங்கரிக்க அத்தான்காரன் அத ரசிக்க..’ எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சிவபத்மயன் இசையில் பாடலாசிரியர் வாகீசன் ராசையா எழுத, பாடகர்கள் வாகீசன் ராசையா- ரமணன் நந்தகோபால் – கில்மிசா உதயசீலன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய இசை வடிவ பாணியில் உருவாகி இருப்பதால்.. இளைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

The post நவீன் சந்திரா நடிக்கும் ‘நீளிரா’ படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.

By admin