சென்னை: நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 21, 22 ஆம் தேதிகளில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். நவ.22 ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.