• Fri. Nov 22nd, 2024

24×7 Live News

Apdin News

நாகா பழங்குடி: பிரிட்டனில் ஏலம் விடப்பட இருந்த இந்தியரின் மண்டை ஓடு – மீட்க போராடும் மக்கள்

Byadmin

Nov 22, 2024


பிரிட்டனிலிருந்து மூதாதையர்களின் மண்டை ஓடுகளை மீண்டும் கொண்டு வர முற்படும் இந்தியப் பழங்குடியினர்

பட மூலாதாரம், Alok Kumar Kanungo

படக்குறிப்பு, ஐரோப்பிய காலனித்துவ நிர்வாகிகளால் நாகா பழங்குடியினரின் மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டன

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மண்டை ஓடு, கடந்த மாதம் பிரிட்டனில் ஏலத்திற்கு வைக்கப்பட்டதை கண்டு எலன் கொன்யாக் அதிர்ச்சியடைந்தார்.

நாகலாந்து மாநிலத்தில் இருந்து, ஐரோப்பிய காலனித்துவ நிர்வாகிகள் சேகரித்த ஆயிரக்கணக்கான பொருட்களில், நாகா பழங்குடியினரின் கொம்பு மண்டை ஓடும் அடங்கும்.

இந்த மனித எச்சங்களை திரும்ப கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நாகா நல்லிணக்க மன்றத்தின் (Forum for Reconciliation- NFR) உறுப்பினர் கொன்யாக், ஏலம் பற்றிய செய்தி தன்னை தொந்தரவு செய்ததாக கூறுகிறார்.

“21-ஆம் நூற்றாண்டில் நமது மூதாதையரின் மனித எச்சங்களை மக்கள் இன்னும் ஏலம் விடுவதைப் பார்ப்பது அதிர்ச்சியாக இருந்தது,” என்று அவர் கூறினார். “உணர்ச்சியற்ற இந்த செயல் மிகவும் புண்படுத்தியது ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

By admin