• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

‘நாங்கள் பழகிய துபை அல்ல’ – இரான் தாக்குதல் இந்த நகரத்தில் ஏற்படுத்திய விளைவு என்ன?

Byadmin

Mar 2, 2026


'நாங்கள் பழகிய துபை அல்ல'  -  இரான் தாக்குதல் இந்த நகரத்தில் ஏற்படுத்திய விளைவு என்ன?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியம் முழுவதும் இரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் துபையில் வசிப்பவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபையின் முக்கிய விமான நிலையம் ஆகியவை சேதமடைந்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு சுற்றுலா சென்றவர்களிடம் பிபிசி பேசியது. அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை விவரித்தனர்.

அங்கு வசிக்கும் பெக்கி வில்லியம்ஸ், “நேற்று எனது வீட்டிற்குப் பின்னால் இருந்து சுமார் 15 ஏவுகணைகள் ஏவப்படுவதைக் கண்டேன்” என்றார்.

இரானிலிருந்து வந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அவர் குறிப்பிட்டார்.

By admin