• Thu. Apr 2nd, 2026

24×7 Live News

Apdin News

நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் – சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்?

Byadmin

Apr 2, 2026


நாசா, நிலவு, ஆர்டெமிஸ் II

பட மூலாதாரம், Anadolu via Getty Images

நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக புறப்பட்டது.

இந்திய நேரப்படி, செவ்வாய்கிழமை அன்று அதிகாலை 4 மணியளவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது.

இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குகிறது.

ஆர்டெமிஸ் 2 திட்டக் குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோக், மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் பத்திரிகையாளர் சந்திப்பை தொடங்கி, திட்டத்தின் செயல்பாட்டு நிலை குறித்து தகவல் வழங்கினார்.

By admin