0
நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்போது, 639 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்ட 17 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 232 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 152 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 34 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக 3 ஆயிரத்து 709 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் நேற்று மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 26 ஆயிரத்து 985 பேர் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.