• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருநர் சட்டத்திருத்த மசோதா – இதற்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

Byadmin

Mar 28, 2026


திருநர் சட்டத் திருத்த மசோதா: நாடு முழுவதும் திருநர் சமூகத்தினர் கொந்தளிப்பது ஏன்?

பட மூலாதாரம், AFP via Getty Images

திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026 (Transgender Persons (Protection of Rights) Amendment Bill, 2026) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தம், திருநர் அடையாளத்தின் வரையறையை மாற்ற முன்மொழிகிறது. இந்தத் திருத்தத்தில் பாலின சுய-அடையாளம் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்தத் திருத்தம் அவசியம் என்பதற்கான காரணமாகக் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சில சிரமங்களை அரசு முன்வைக்கிறது.

அதனால்தான், சட்டத்தின் பலன்கள் உண்மையாகத் தேவைப்படுவோருக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதற்கு, திருநரின் வரையறையை மறுபரிசீலனை செய்வது அவசியமாக இருந்தது.

இந்தத் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருநர் சமூகத்தின் சில பிரிவினரிடையே அதிருப்தி காணப்படுகிறது.

By admin