நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் நாளை அதிகாலை பனியுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அதேநேரம் நாட்டின் கடற்பிராந்தியங்களில் மழை நிலைமையானது, திருகோணமலை முதல் மன்னார் ஊடாக முல்லைத்தீவு, காங்கேசன்துறை வரையிலான கரையோரக் கடற்பிராந்தியங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கரையோரக் கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் நாட்டின் கடற்பிராந்தியங்களில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து மாறுபடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை இருக்கும். புத்தளம் முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கரையோரக் கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரையிலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நிலையானது புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையிலும் உள்ள கரையோரக் கடற்பிராந்தியங்களில் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பகுதிகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கலாம். மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
The post நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது ! appeared first on Vanakkam London.