• Thu. Aug 7th, 2025

24×7 Live News

Apdin News

நாட்டை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

Byadmin

Aug 7, 2025


அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை (06) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

சமந்தா ஜோய் மோஸ்டினை  விமான நிலையத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றுள்ளார்.

அவரது வருகை அவுஸ்திரேலியா –  இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயத்தைக் குறிப்பதோடு,  அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதலாவது அதிகாரப்பூர்வ விஜயம் இதுவாகும்.

By admin