• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

‘நான் இயக்குநரானதற்கு தனுஷ் தான் காரணம் ‘ | கென் கருணாஸ்

Byadmin

Mar 16, 2026


‘எம்முடைய திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்தியவர் இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ படத்தில் பணியாற்றும்போது தனுசிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். நான் இயக்குநரானதற்கு தனுஷ் தான் காரணம்’ என ‘யூத்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமாகும் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் தயாரிப்பில் இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில் குமார் ,மீனாட்சி தினேஷ் , பிரியன்யான்ஷி யாதவ், நளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் விக்கி ஒளிப்பதிவு செய்திருக்க, ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் யூத் திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.

வெளியீட்டிற்கு முன் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன்- நட்சத்திர நடிகர் தனுஷ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

நடிகர் தனுஷ் பேசுகையில், ” இன்றைய இளம் தலைமுறை 20- 25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாம் தான் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்கி இருப்பது என்பது சாதாரண விடயம் அல்ல. அவருடைய உழைப்பும், நம்பிக்கையும் பாராட்டத்தக்கது. ‘யூத்’ படம் மாபெரும் வெற்றி பெற எம்முடைய வாழ்த்துக்கள் ” என்றார்.

The post ‘நான் இயக்குநரானதற்கு தனுஷ் தான் காரணம் ‘ | கென் கருணாஸ் appeared first on Vanakkam London.

By admin