• Wed. Jan 7th, 2026

24×7 Live News

Apdin News

‘நான் ஒரு போர்க்கைதி’: அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?

Byadmin

Jan 6, 2026


வெனிசுவேலா - அமெரிக்கா, மதுரோ, டிரம்ப், நியூயார்க் நீதிமன்றம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோவும் அவரது மனைவியும் ஆஜர்படுத்தப்பட்டதை சித்தரிக்கும் வரைபடம்

அமெரிக்காவில் வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ முதன்முறையாக நியூயார்க் நகர நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்குச் சில கணங்களுக்கு முன்பு, அவரது கால்களில் மாட்டப்பட்டிருந்த விலங்குகள் உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.

பின்னர் அவர், நிரம்பி வழிந்த செய்தியாளர்களிடமும் பொதுமக்களிடமும் தான் இப்போதுதான் “கடத்தப்பட்டதாக” கூறினார்.

அவர் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன், விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக மதுரோவிடம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டார்.

“நான் நிக்கோலஸ் மதுரோ. நான் வெனிசுவேலா குடியரசின் அதிபர், நான் ஜனவரி 3ஆம் தேதி முதல் இங்கு கடத்தப்பட்டு இருக்கிறேன்,” என்று அவர் நீதிமன்றத்தில் ஸ்பானிய மொழியில் அமைதியாக கூறினார்.

பின்னர் ஒரு மொழிபெயர்ப்பாளர் நீதிமன்றத்திற்காக அதை மொழிபெயர்த்தார். “நான் வெனிசுவேலாவின் கராகஸில் உள்ள எனது வீட்டில் வைத்துப் சிறைபிடிக்கப்பட்டேன்.” என்றார் மதுரோ.

By admin