• Fri. Dec 19th, 2025

24×7 Live News

Apdin News

நான் நீரிலும் பலமானவள் | லஹரி

Byadmin

Dec 19, 2025


நீராகிப் போயின….!

எல்லாம்…
எல்லாமேதான்…

என் குடிலில்….
எனதும்
என்னவனதும்
என் பிள்ளைகளதும்
நானும் கொண்ட
நினைவுகளுந்தான்!

எல்லாவற்றையும்..
ஒற்றை நாள் மழையில்
இழந்தேன்…!

ஒரு முட்டைக் கோது
நொருங்குவதைப் போல…
எனதும் என்னவனதும்
என்….
என் பிள்ளைகளதும்…
இதயம் நொருங்கிப் போயினவே…!

எனக்கு ….
என்னவன் தப்பினான்…
என் பிள்ளைகள் தப்பினார்கள்…
நான்
தப்பாவிடினும் என்ன…
அது போதும்!

என்னால்….
அவர்கள் வாழ்வார்கள்!
அவர்களால் நானும் வாழ்வேன்!

அந்த வாழ்வைவிட
வெள்ளம் எல்லாமே
விழுங்கிப் போகட்டுமே…!

நான்
நூல்களை இழந்தேன்
பிள்ளைகளை இழக்கவில்லை…
நான்
திருமணச் சேலைகளை இழந்தேன்
என்னவனை இழக்கவில்லை…
புத்தக அலுமாரிகளை இழந்தேன்
ஆனால்…
என்னை இழக்கவில்லை!

நான் கையேந்தாத ஒரு வரம்…
என் வாழ்வு!

அதை நீராலும்
மூழ்கடிக்க இயலாது!

நான் நீரிலும் பலமானவள்!

-லஹரி

The post நான் நீரிலும் பலமானவள் | லஹரி appeared first on Vanakkam London.

By admin