• Tue. Sep 16th, 2025

24×7 Live News

Apdin News

நான் மக்களை அழைத்துவருவதில்லை | முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Byadmin

Sep 16, 2025


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய போது நான் மக்களை அழைத்துவருவதில்லை என அவர் கூறினார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

ஊடகவியலாளர் :  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் 11 ஆம் திகதி கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை கண்டோம். உங்களைப் பார்க்க யாரும் வரவில்லையா?

மைத்திரிபால சிறிசேன :  இல்லை, இல்லை. நான் மக்களை அழைத்துவருவதில்லை. ஊடகவியலாளர் :  அதாவது, மக்கள் ஏற்பாடு செய்யப்படுகிறார்களா? மைத்திரிபால சிறிசேன :  நான் மக்களை அழைத்துவருவதில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை நான் மதிக்கிறேன்.

என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

By admin