கோவை: தமிழக முதல்வர் அமல்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டத்துக்கு உலகெங்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
‘நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ரூ 31 கோடி மதிப்பீட்டில் 29 அரசு பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களை காணொலி காட்சி மூலம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்து கோவை தாடாகம் சாலையில் உள்ள ஜிசிடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை நேரில் பார்வையிட்டார்.
அவர் பேசியதாவது: “தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ரூ. 31 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 29 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை நிகழ்வில் 30 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சனையை தீர்க்கும் மாடல், திராவிட மாடல் ஃபார்முலா. ‘நான் முதல்வன்’ திட்டத்தை உலகமே புகழ்ந்து வருகிறது.
நான் முதல்வன் திட்டம் இதுவரை 30 லட்சம் பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளது. 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. 25 மாணவர்கள் லண்டன் சென்று திரும்பியுள்ளனர். இதுதான் திராவிட மாடல் வெற்றி. வேலைவாய்ப்பை உருவாக்க இந்த அரசு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு என்றும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும். இவ்வாற் உதயநிதி பேசினார்.