• Tue. Sep 2nd, 2025

24×7 Live News

Apdin News

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்: உதயநிதி உத்தரவு | Udhayanidhi orders to hold more employment camps through the naan mudhalvan scheme

Byadmin

Sep 2, 2025


சென்னை: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் வேலை​வாய்ப்பு முகாம்​களை அதிக எண்​ணிக்​கை​யில் நடத்த வேண்​டும் என்று தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக உயர் அதி​காரி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் மூலம் செயல்​படுத்​தப்​பட்டு வரும் திட்​டங்​களின் செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​கூட்​டம், சென்னை நந்​தனத்​தில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடந்​தது.

இதில் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் செயல்​படுத்​தப்​படும் முன்​னெடுப்​பு​களான கல்​லூரிக் கனவு திட்​டம், பொறி​யியல், கலை மற்​றும் அறி​வியல், பாலிடெக்​னிக், தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் திறன் பயிற்சி வழங்​குதல், ஸ்க​வுட் திட்​டம், தமிழ்​நாடு திறன் போட்​டிகள், நிரல் திரு​விழா (Hackathon), தமிழ்​நாடு மாநில அளவிளான வேலை​வாய்ப்பு திட்​டம் (TNSLPP), உயர்​வுக்​குப்​படி திட்​டம், நான் முதல்​வன் போட்​டித் தேர்​வு​கள் (குடிமைப்​பணித் தேர்​வு, ஊக்​கத் தொகை திட்​டம் மற்​றும் எஸ்​எஸ்​சி, வங்கி பணி​யாளர் தேர்வு வாரிய போட்​டித் தேர்​வு​களுக்​கான உறை​விடப் பயிற்​சி ஆகிய​வற்​றின் தற்​போதைய முன்​னேற்​றம் குறித்து துணை முதல்​வர் விரி​வாக ஆய்வு மேற்​கொண்​டார்.

‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின்​கீழ் சிறப்​பாக செயல்​படும் கல்​லூரி​களை தேர்ந்​தெடுத்து ஊக்​குவிக்க வேண்​டும். 2026-ல் சீனா​வின் ஷாங்​காய் நகரில் நடை​பெறும் சர்​வ​தேச திறன் போட்​டிகளில் பங்கு பெறு​வதற்​கான தமிழக மாணவர்​களின் எண்​ணிக்​கையை உயர்த்த தேவை​யான உயர்தர தொழில்​நுட்ப பயிற்​சியை வழங்க வேண்​டும். நிரல் திரு​விழா 2.0 மூலம் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாணவர்​களை தொழில் முனை​வோராக உரு​வாக்க வேண்​டும்.

‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் நடை​பெறும் வேலை​வாய்ப்பு முகாம்​களை அதி​கப்​படுத்தி அதிக எண்​ணிக்​கையி​லான மாணவர்​கள் வேலை​வாய்ப்​பைப் பெற நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இத்​திட்​டத்​தின் போட்​டித் தேர்​வு​கள் பிரி​வின்​கீழ் அரசுப் பணி​களில் பணி​வாய்ப்பு பெறு​பவர்​களின் தேர்ச்சி எண்​ணிக்​கையை அதி​கப்​படுத்த இலக்கு நிர்​ண​யித்து செயல்பட வேண்​டும்.

விளை​யாட்​டுத் துறை​யில் சிறந்து விளங்​கிய​வர்​கள் அவர்​கள் விரும்​பும் வேலை​வாய்ப்பை பெறும் வகை​யில் திறன் பயிற்​சிகளை வழங்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என அலு​வலர்​களுக்கு பல்​வேறு அறி​வுரைகளை துணை முதல்​வர் வழங்​கி​னார். இந்த ஆய்​வுக் கூட்​டத்​தில் சிறப்​புத்​திட்ட செய​லாக்​கத் ​துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக மேலாண் இயக்​குநர் கிராந்தி குமார் பாடி மற்​றும் உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



By admin