• Wed. Apr 8th, 2026

24×7 Live News

Apdin News

நான் வரேன்… டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதை உறுதிப்படுத்திய பிரேவிஸ்

Byadmin

Apr 8, 2026


சென்னை:

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்கிஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

சென்னை அணியின் முக்கிய வீரரான டேவாலட் பிரேவிஸ் காயம் காரணமாக இன்னும் களம் காணவில்லை. இது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 11-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது. இந்த போட்டிக்குள் சென்னை அணியின் இளம் பேட்ஸ்மேன் பிரேவிஸ் உடல்தகுதி பெற்று விடுவார் என்று தலைமை பயிற்சி யாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்திருந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதை பிரேவிஸ் அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

By admin