• Wed. Sep 24th, 2025

24×7 Live News

Apdin News

நாமக்கல், கோவை, உடுமலையில் கோழிப் பண்ணை அலுவலகங்களில் வருமான வரி சோதனை | Income tax raids at poultry farm office in Namakkal, Coimbatore and Udumalai

Byadmin

Sep 24, 2025


நாமக்கல் / உடுமலை: ​நாமக்​கல், கோவை, உடுமலை​யில் கோழிப்​பண்ணை உரிமை​யாளர்​களின் வீடு​கள், அலு​வல​கங்​களில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர். நாமக்​கல் மோக​னூர் சாலை எம்​.ஜி. நகரைச் சேர்ந்த கோழிப்​பண்ணை உரிமை​யாளர் வாங்​கிலி சுப்​பிரமணி​யம். இவர் நாமக்​கல், கிருஷ்ணகிரி உள்​ளிட்ட இடங்​களில் முட்​டைக்​கோழி மற்​றும் பிராய்​லர் கோழிப்​பண்​ணை​களை நடத்தி வரு​கிறார்.

மேலும், கோழித்​தீவன ஆலை, கோழிக்​குஞ்சு பொறிக்​கும் ஹேச்​சரீஸ், நிதி நிறு​வனம் உள்​ளிட்​ட​வற்​றை​யும் நடத்தி வரு​கிறார். இவர், தமிழ்​நாடு முட்​டைக் கோழிப் பண்​ணை​யாளர்​கள் மார்க்​கெட்​டிங் சொசைட்டி தலை​வ​ராக​வும் பொறுப்பு வகித்து வரு​கிறார். அவரது அலு​வல​கம் நாமக்​கல்​லில் திருச்சி பிர​தான சாலை மற்​றும் கிருஷ்ணகிரி​யில் செயல்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று காலை 30-க்​கும் மேற்​பட்ட வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் வாங்​கிலி சுப்​பிரமணி​யத்​தின் வீடு, அலு​வல​கங்​கள் மற்​றும் நிதி நிறுவன அலு​வல​கம் ஆகிய​வற்​றில் சோதனை மேற்​கொண்​டனர். நேற்று மாலை வரை சோதனை நீடித்​தது. வரி ஏய்ப்பு செய்​த​தாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சோதனை மேற்​கொள்​ளப்​படு​வ​தாக வரு​மான வரித் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

உடுமலையில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை

மேற்கொண்ட கறிக்கோழி நிறுவன அலுவலகம்.

இதே​போல, திருப்​பூர் மாவட்​டம் உடுமலை நேரு வீதி​யில் உள்ள தனி​யார் கறிக்​கோழி நிறு​வனத்​தில் நேற்று காலை வரு​மானவரித் துறை துணை ஆணை​யர் பெர்​னாண்டோ தலை​மை​யில் 10 பேர் கொண்ட குழு​வினர் திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். அலு​வலகக் கோப்​பு​கள், ஆவணங்​கள் மற்​றும் மடிக்​கணினி​கள் ஆகிய​வற்றை அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர்.

இந்​நிறு​வனத்​துக்குச் சொந்​த​மான பண்ணை இல்​லம், கார்ப்​பரேட் அலு​வல​கம் உட்பட பல்​வேறு இடங்​களி​லும் சோதனை நடந்​தது. நேற்று மாலை வரை சோதனை தொடர்ந்​தது. கோவை​யில் உள்ள தனி​யார் கறிக்​கோழி நிறு​வனத்​தின் 2 அலு​வல​கங்​களி​லும் நேற்று வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர்.

மேலும், அவி​நாசி சாலை​யில் உள்ள வணிக வளாக கட்​டிடத்​தின் 6-வது தளத்​தில் செயல்​பட்டு வரும் கார்ப்​பரேட் அலு​வல​கம் மற்​றும் பந்தய சாலை பகு​தி​யில் உள்ள அலு​வல​கம் ஆகிய​வற்​றிலும் 30-க்​கும் மேற்​பட்ட அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்​.



By admin