• Thu. Mar 26th, 2026

24×7 Live News

Apdin News

நாமக்கல்: பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கு தனித்தனி அங்கன்வாடி மையங்களா? புதிய சர்ச்சை

Byadmin

Mar 26, 2026


தமிழ்நாடு, சாதி, அரசியல், தேர்தல் 2026
படக்குறிப்பு, முதலில் (இடதுபுறம்) இருக்கும் அங்கன்வாடி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக என்றும், அருகில் இருக்கும் கட்டடம் பட்டியல் சமூக குழந்தைகளுக்கான அங்கன்வாடி என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    • எழுதியவர், பெ.சிவசுப்பிரமணியன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘பிரச்னைகளைப் பேசுவோம்’ என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக, தங்கள் பகுதிகளில் நிலவும் சாதிய பிரச்னைகள் குறித்த பல தகவல்களை மக்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்தனர்.

அதன் ஒரு பகுதியாக “எங்கள் ஊரில், சாதி என்றால் என்னவென்றே தெரியாத இரண்டு வயதுக் குழந்தைகளைக் கூட சாதியை காரணம் காட்டி, அரசு அங்கன்வாடிகளில் பிரித்து வைக்கிறார்கள்” என நாமக்கல் மாவட்டத்தின் ஒரு கிராமத்திலிருந்து இருந்து பிபிசிக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் பிபிசி தமிழ் குழு அப்பகுதிக்கு சென்று கள ஆய்வு செய்தது. அதில் பிபிசி கண்டறிந்தவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

‘பட்டியல் பிரிவு மக்களுக்கு என தனி அங்கன்வாடி’

தமிழ்நாடு, சாதி, அரசியல், தேர்தல் 2026
படக்குறிப்பு, அங்கன்வாடி மையத்தின் அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த பாக்கியம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், காக்காவேரி ஊராட்சியில், காக்காவேரி, வெங்காய பாளையம், பச்சப்பாளி, பூசாரிபாளையம், வேலம்பாளையம், மேட்டுப்பாளையம், பச்சாபாளையம், மேட்டுக்காடு எனப் பல சிற்றூர்கள் உள்ளன.

ராசிபுரம் – ஆத்தூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காக்காவேரியின் தென் பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளன.

By admin