புதுச்சேரி மேட்டுப்பாளையம் சந்திப்பில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் டி.வி.கே., டி.வி.கே என்று கூச்சலிட்டார். ‘ஏன் இங்கு வந்து டீ விக்கிற, அப்படி போய் டீ வித்துட்டு போடா’ என்று சீமான் கூற பதிலுக்கு அவர் திட்டினார்.
ஆத்திரமடைந்த சீமான் ‘டே இங்க வாடா.. இங்க வந்து டீ வித்துட்டு போடா’ என கோபமாக குரல் கொடுத்தார். இதைக் கேட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அந்த நபரை சுற்றிவளைத்து தாக்கினர்.