• Sat. May 24th, 2025

24×7 Live News

Apdin News

நார்வே: வீட்டுத் தோட்டத்தில் மோதி நின்ற பிரமாண்ட கப்பல் – காலையில் கண்விழித்தவருக்கு அதிர்ச்சி

Byadmin

May 24, 2025


வீட்டுத் தோட்டத்தில் மோதி நின்ற கப்பல் - காலையில் கண்விழித்தவருக்கு அதிர்ச்சி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தரைதட்டி நின்ற கப்பல்

நார்வேயில் உள்ள நபர் ஒருவர் காலையில் தூங்கி எழும் போது, அவரது வீட்டின் முன்னாள் உள்ள தோட்டத்தில் கண்டெய்னர் கப்பல் ஒன்று கரையை உடைத்துக் கொண்டு வந்து நின்றது.

ஜோஹன் ஹெல்பெர்க் என்ற அந்த நபரின் வீடு அந்த கப்பலால் இடிக்கப்படுவதிலிருந்து சில மீட்டர் தூர வித்தியாசத்தில் தப்பியிருந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டிரோந்தெய்ம் என்ற இடத்தில் அந்த பிரமாண்ட கப்பல் கரையை நோக்கி நேராக வருவதைப் பார்த்த ஹெல்பெர்க்கின் அண்டை வீட்டுக்காரர் அவரை உஷார்ப்படுத்தினார்.

“நான் கதவைத் திறக்க விருப்பப்படாத நேரத்தில் வீட்டின் மணி அடிக்கப்பட்டது” என டிவி2 தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் ஹெல்பெர்க் கூறுகிறார்.

By admin